
அவசரம் பூசி
அவதியாய் பேருந்தேற..
நடுவயது யுவதி
நட்பில் மலர்ந்தாள்
இதழ்..
நட்பு காட்ட
என் கையிலும்
மழலைச் சிரிப்பு..
நல்ல ஆங்கிலம்
பேசும் சீனப் பெண்
அவள்..
ஹோம் அலோன்
படத்தில் புறாக்களுக்கு
உணவூட்டும்
தாய் முகம் நினைவூட்டியது
அவள் முகம்..
பேருந்தேறும்
அனைவரோடும்
பேசினாள்..
அன்பு, கண்டிப்பு
என அளவாய்
வாயாடினாள்..
முதியவரும், இளைஞனும்
ஒருங்கே ஏற..
இளைஞன் இருக்கையை
எழுப்பி முதியவர்
அமரச் செய்தாள்..
எதிரமர்ந்து நாம்
தலையசைக்க..
எதையெல்லாமோ
புலம்பினாள்..
கால் பட்ட புண் காட்டி..
அலைபேசி படம் காட்டி..
அருகமர்ந்த குழந்தை மிரட்டி..
என் மழலை அடம் நிறுத்தி..
இப்படியாக
அவள் வாய் மட்டும்
ஓயவே இல்லை..
திடீரென எனைப் பார்த்து,
இந்தியரா என்றாள்..
என் பதிலசைப்பில்..
"செக்சன் இலக்கம் பகர்ந்து,
பெண் கொடுமை,
வரதட்சணை சட்டம் தெரியுமா?"
என்றாள்..
அவளளவு சொல்ல
தெரியாததால்
தெரிந்தும் தெரியுமென
சொல்ல வெட்கப்பட்டது
மனம்..
ஏதேதோ பேசி..
காற்றில் பாதி கரைய..
மீதி எங்களுக்கு புரிய..
இறங்கும் இடம் வர..
விடைபெற்றாள்..
அருகிருப்போர் மிரட்சியில்
சொன்னார்கள்..
அவள் ரொம்ப பேசுகிறாள்..
பைத்தியம் போல..
எனக்கும் மட்டும்
அன்பும் கண்டிப்பும் மிகுந்த
அற்புத ஆசானாகத் தான்
அறிமுகமாகியிருந்தாள் அவள்..!!
--பூமகள்.
7 comments:
Home alone maadhiriye oru dove-bommaiyai koduththutteenga, intha pathivu moolamaga!
அருமை
சில நேரங்களில் நன்கு பேசுகிறவர்கள் கிடைத்தால் மனச் சோர்வு அகன்று போகும்..
ஹா ஹா..
முதல் பின்னூட்டம் கொடுத்து ஊக்கப்படுத்தியதற்கு ரொம்ப நன்றிங்க மாதவி.. :)
நன்றிங்க தம்பி கூர்மதியன். :)
உண்மை தான் ரிஷபன்.. அவருக்கு சோர்வு நீங்கியதோ இல்லையோ.. எங்களுக்கு நீங்கியது. :)
அருமையான கவிதை.. வாழ்த்துக்கள்
உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பார்க்கவும்.
http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_04.html
Post a Comment